Loading...
மட்டக்களப்பில் முகத்துவாரம் ஆற்றுவாய் வெட்டப்பட்டதை தொடர்ந்து அதிகளவான மீன்கள் பிடிபடுவதாக மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முகத்துவாரப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மீனவர்களும் பொழுது போக்கிற்காக வருகை தருகின்றவர்களும் மீன்களை பிடிப்பதும் மீன்களை கொள்வனவு செய்வதுமாக அதிகளவான மக்கள் அங்கு கூடியுள்ளனர்.
Loading...
அத்துடன் கடந்த இரு நாட்களும் மீன்கள் மலிவான விலையில் மக்களுக்கு கிடைத்ததை தொடர்ந்து அதிகளவான மக்கள் அவ்விடத்திற்கு வருகை தந்தமையினையும் அவதானிக்க கூடியதாகவிருந்தது.
மேலும் வெட்டப்பட்ட ஆற்றுவாயினை நாவலடி பகுதியாலும் முகத்துவாரம் பகுதியாலும் மக்கள் வந்து ஆற்று நீர் கடலுக்குள் ஓடும் அழகிய காட்சியினை மக்கள் பார்வையிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Loading...