கடந்த வருடம் டிசம்பரில் மாவனெல்ல பகுதியில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் மாலைதீவு பிரஜை ஒருவருக்கு பொலிசார் வலைவிரித்து தேடிவருகின்றனர்.
சம்பவங்களுடன் தொடர்புடையவரென சந்தேகிக்கபடும் குறித்த நபர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் சதேக நபர் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் குற்றவியல் புலனாய்வுத்துறை, அவரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சந்தேகநபர் 30 – 35 வயதிற்கிடைப்பட்டவர் என தெரிவித்துள்ள சிஐடியினர் அது தொடர்பான தரவுகளின் அடிப்படையில் மாதிரி உருவத்தை வெளியிட்டுள்ளனர்.
குறித்த நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருக்கு தகவல் தருமாறு அறிவித்துள்ளனர்.
தகவல் தெரிந்தவர்கள் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களிற்கு தகவல் வழங்க முடியும் எனவும் பொலிசார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் துறை: 0112-326936
OIC: 0718591774