கடந்த இரண்டுதினங்களுக்கு முன்னர் யாழில் பல்கலை விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதியாண்டு மாணவன் கியூமன் நேற்றையதினம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கியூமனின் இறுதிக்கிரியைகள் இன்றையதினம் நடந்தேறியுள்ளது.
இலங்கையின் கல்வித்தரத்தில் சற்றுப்பின்னுக்கு நிற்கின்ற மாவட்டமான மன்னார் மாவட்டத்திலிருந்து, கனவுகளோடு பல போட்டிகளின் மத்தியிலும் சவால்களிலும் கல்வி கற்று நான்கு வருடங்களைப்பூர்த்தி செய்துள்ள ஒரு மாணவின் இந்த விபரீத முடிவிற்கு யார் காரணம்?
ஒரு பயில்நிலை மருத்துவராக வெளிவர சில மாதங்கள் உள்ள நேரத்தில் மாணவனின் விபரீத முடிவு அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இதேவேளை காலந்தோறும் பட்டதாரிகளை உருவாக்குவதற்கு தவறாத பல்கலைக்கழகங்கள் காலத்திற்கு காலம் பெறுமதியான உயிர்களையும் பலியெடுத்துவிடுகின்றன.
அத்துடன் இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடமும் விதிவிலக்கல்ல என கல்விமான்கள் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் பல்கலைகழக நிர்வாகங்கள் சமுதாயத்திற்கு நல்ல மாணாக்கர்களை உருவாக்கி கொடுக்கவேண்டுமே தவிர அவர்கள் கோழைத்தமான முடிவெடுத்து உயிர்களை அழிக்கும் அளவிற்கு கட்டுப்பாடுகளையோ விதிமுறைகளையோ விதிக்க கூடாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கியூமனின் இந்த முடிவை வேறு மாணவர்கள் எவரும் தேடிக்கொள்ளவேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.