திருமணம் முடிக்காமல் குழந்தைபெற்ற யுவதியொருவர் தனது கைப்பட எழுதிய கடிதத்துடன் குழந்தையை மதராசா பள்ளியொன்றுக்கு வெளியே விட்டு சென்றநிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோடுவிற்கு அருகே உள்ள திருவன்னூர் பகுதியிலுள்ள மதராசா பள்ளிக்கு வெளியே கடந்த 28ஆம் திகதி குறித்த குழந்தையை அந்த யுவதி விட்டுச் சென்றுள்ளார்.
குழந்தையை சுற்றப்பட்ட துணியில் வைக்கப்பட்டிருந்த கடிதத்தில், “இந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். இந்தக் குழந்தை அல்லாவிடம் இருந்து வந்த பரிசாக நினைத்து பார்த்து கொள்ளுங்கள். மேலும் இந்தக் குழந்தைக்கு அனைத்து வகை தடுப்பு ஊசிகளையும் போட்டு விடுங்கள்” என எழுதப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் இந்தக் குழந்தையின் தாய் ஒரு 21 வயது பெண் எனவும் . அவர் திருமணமாகவில்லை என்பதையும் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.
இதுபோன்ற ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்க கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மையங்கள் உள்ளன. அந்த மையங்களில் விட்டுச் செல்லாமல் வெளியே பள்ளிக்கு அருகில் விட்டுச் சென்ற காரணத்திற்காகவே அந்த பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.