அமெரிக்காவில் காதலனை ரத்தத்தை குடிக்கும் படி வற்புறுத்தியது மட்டுமில்லாமல் அவரை கொடூரமாக குத்தி கொலை செய்துள்ள காதலியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Springfield மாகாணத்தில் விக்டோரியா வானேட்டர்(19) என்ற இளம்பெண் தன்னுடைய காதலுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று இருவரும் மது அருந்திவிட்டு ரத்தக்காட்டேரிகளை பற்றி விவாதித்துள்ளனர்.
அப்போது மதுவின் தாக்கம் அதிகமானதால் விக்டோரியா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது கையை வெட்டி, அதில் வரும் ரத்தத்தை குடிக்கும்படி காதலனை வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் அவரோ மறுக்க, அதற்கு பதிலாக காதலனுடைய கையை வெட்டி ரத்தத்தை குடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி அவரை கொடூரமாக கத்தியை வைத்து தாக்கியுள்ளார். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.
அதன் பின்னர் நிலைமையை உணர்ந்த காதலி, உடனடியாக அவசர எண்ணை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முதலுதவி குழுவினர் வீட்டை திறந்தபோது வானட்டரின் காதலன் தனக்கு எந்த உதவியும் வேண்டாம் என கூறி கதவை அடைத்துள்ளார்.
பின்னர் கதவை திறந்த காதலி தனது ரத்தத்தை குடிக்குமாறு காதலனை வற்புறுத்தியதாகவும் பின்னர் அவரை கத்தியால் குத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் சமுதாயத்திற்கு ஒரு ஆபத்தான பெண் என்றும், தன்னை விட்டு வைத்தால் சீரியல் கில்லராக மாறிவிடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறியும் அதிகாரிகளை கைது செய்யும் படி வற்புறுத்தியுள்ளார்.
அதன் பின்னர் அதிகாரிகள் பொலிசாருக்கு தகவல் அறிவித்த பின்பு, பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 1.50 லட்சம் டொலர்களை பிணையத் தொகையாக செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளது.