எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் வாக்களிப்பு நிலையத்துக்குள் நுழையும்போது புர்கா அல்லது நிகாப் என்பவற்றை அணியக்கூடாது என தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
எனொஇனும் வாக்களிப்பு நிலையத்திற்கு வரும்போது அவற்றினை அணியலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பது அவர்களுக்கு ஒரு வாக்குச் சீட்டு வழங்கப்படுவதற்கு முன்பு அவர்களின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாக்களிக்கும்போது வாக்களார் ஒருவர் தனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டியது அவசியம் என்கூறிய அவர், அவரது அடையாளம் அடையாள அட்டையில் முகத்துடன் இணையாக இருக்க வேண்டும் என்றும் அதற்காக, அவர் முகத்தை மறைத்திருக்கும் நிகாப் மற்றும் புர்கா போன்றவற்றை அகற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் மேற்படி நிபந்தனைகளை கருத்திற்கொள்ளாமல் ஒரு வாக்களார் தனது நிகாப் மற்றும் புர்கா போன்றவற்றை அகற்றாது வாக்களிப்பதற்கு, தலைமை அதிகாரி அனுமதி வழங்கக்கூடாது எனவும் சமன் சமன் ஸ்ரீ ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.