வவுனியா மாவட்டத்தில் நேற்றய தினம் 50ற்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இருளில் மூழ்கியிருந்தது.
இந்நிலையில் அப்பகுதி இளைஞா்கள் தொடா் வீதி மறியல் மற்றும் ரயில் மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சுமார் 5 மணித்தியாலத்தின் பின்னர் குறித்த கிராமங்களிற்கு மின்சாரம் வழங்கப்பட்டது.
மின்சாரசபை ஊழியா்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை தொடா்ந்து நே ற்றய தினம் இரவு வவுனியா மாவட்டத்தில் சுமார் 50ற்கும் அதிகமான கிராமங்களிற்கு மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றய தினம் இரவே வீதிகளுக்கு இறங்கிய இளைஞா்கள் ஏ-9 வீதி மற்றும் புகைரதத்தை மறித்து சுமாா் 5 மணிநேரம் தொடா்ச் சியான போராட்டத்தை நடாத்தியிருந்தனா்.
இதனையடுத்து 5 மணிநேரத்தின் பின் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது