மஹிந்த ராஜபக்ஷ தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் மரண அச்சுறுல் விடுத்ததாக சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
17 ஆண்டுகளாக ராஜபக்ஷர்களுடன் நெருக்கமாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அரசியல் செய்த சஜின்வாஸ் குணவர்தன கடந்த 2015ம் ஆண்டின் பின்பு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அரசியலை ஆரம்பித்தார்.
குறித்த காலத்தில் இருந்து மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய எம்பி ஒருவரினால் தனது மனைவிக்கு தொலைபேசி ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், தன்னையும் குழந்தைகளையும் கொலை செய்வதாக மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த எம்.பியிடம் தான் இந்த விவகாரம் குறித்து விசாரித்தபோது இந்த விடயத்தை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, இந்த மாதம் 23 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இது தொடர்பாக ஒரு கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை , ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் ராஜபக்ஷ முகாமின் அச்சுறுத்தல்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.