Loading...
நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் 750 முதல் 1000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளது.
இத்தகவலை அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த பேக்கரிகளில் சமையல் எரிவாயுவினை பயன்படுத்தி பாண் மற்றும் ஏனைய பேக்கரி உணவு வகைகள் உற்பத்திசெய்யப்பட்டு வந்தன.
Loading...
இந்நிலையில், சமையல் எரிவாயு தட்டுப்பட்டினால் பேக்கரி தயாரிப்புக்களை தயாரிக்க முடியாதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
90 சதவீதமான பேக்கரிகள் சமையல் எரிவாயுவினை பயன்படுத்தியே உணவுப் பொருட்களை தயாரித்து வருவதனால் பேக்கரி உரிமையாளர்களுக்கு எந்தவித தாமதமும் இன்றி நிவாரணம் வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...