Loading...
சஜித் பிரேமதாசவின் காலத்தில் தமிழ் மக்களிற்கு தீர்வு கிட்டும். வழி பிறக்கும் என தெரிவித்துள்ளார் இரா.சம்பந்தன்.
இன்று (7) திருகோணமலையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய பிரச்சனையை தீர்க்க சஜித் பிரேமதாச ஊடாக முயற்சி மேற்கொள்ளப்படும். ஒருமித்த நாட்டுக்குள், பிரிவுபடாத நாட்டுக்குள் ஒரு தீர்வு கிட்டும். வழி பிறக்கும்.
Loading...
பெரமுனவின் ஆட்சி தமிழர்களிற்கும், இந்த நாட்டிற்கும் சாதகமாக அமையாது. பாதகமாகவே அமையாது.
தனிப்பட்ட சிறுபான்மையின வேட்பாளர்கள் எந்த விதத்திலும் உதவாது. அது பெரும்பான்மை வேட்பாளர்களிற்கே சாதகமாக அமையும். அதனால் தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களை நிராகரிக்க வேண்டும் என நான் பகிரங்கமாக கூறுகிறேன் என்றார்.
Loading...