பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கின் தீர்ப்பை அறிவித்துள்ளது இந்திய உச்சநீதிமன்றம்.
இதன்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. சமரசக் குழுவின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேதி
குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி வருகிறது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண், டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துல் நஸீர் ஆகியோரை கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. அனைத்து நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கினர். சன்னி பிரிவுக்கு ஷியா வக்ப் வாரியம் தொடர்ந்து மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தலைமை நீதிபதி தீர்ப்பில் கூறியதாவது:
1857-க்கு முன் வரை இந்துக்கள் சர்ச்சைக்குரிய கட்டடத்தில் வழிபட தடை இல்லை.
1857-ல் கட்டடத்தின் உள் பகுதிக்கும் வெளிப்பகுதிக்கும் இடையே தடுப்புகள் உருவாக்கப்பட்டன.
பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்கள் இடம் என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை.
1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல்.
இஸ்லாமியர்களுக்கு மாற்று நிலம் வழங்க வேண்டும். வக்பு போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். அதை 3 மாத காலங்களுக்குள் வழங்கப்படும் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்.
சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்ட, ஒரு அமைப்பை மூன்று மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த தீர்ப்பு இன்றையதினம் வெளியாகவிருந்தநிலையில் உத்தரபிரதேசத்தில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.