வவுனியா தேக்கங்காடு பகுதியில் நேற்றிரவு 11.30 மணியளவில் வீடொன்றினுள் புகுந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் வீட்டிலிருந்த பெண்ணை கட்டிப்பிடிக்க சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியாவில் பணிபுரியும் திருகோணமலையினை சேர்ந்த அரச உத்தியோகத்தர் வவுனியா தேங்கங்காடு பகுதியில் தற்காலிகமாக வசித்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் அவர் வசிக்கும் வீட்டிலிருந்து அயல் வீட்டிற்கு மதிலேறி குதித்து அங்கிருந்த 3 பிள்ளைகளின் தாயான குடும்ப பெண்ணுக்கு முன்பாக உடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக கட்டி அணைக்க முயன்றுள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண் கூச்சலிட்டதை தொடர்ந்து அயலவர்கள் குறித்த நபரை நையப்புடைத்துள்ளனர்.
அத்துடன் குறித்த உத்தியோகத்தரை வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில் குறித்த பெண் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.