இலங்கைக்கும் கனடாவிற்குமிடையில் விமான சேவையி ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தியர் எயார் நிறுவனம் இந்த சேவையில் ஈடுபடும். இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் இந்தியன் எயார் நிறுவனங்களிற்கிடையில் கைச்சாத்தாகியுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைத்தில் இருந்து புறப்படும் விமானங்கள் இந்தியாவின் டெல்லியிலுள்ள இந்திரா விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து கனடாவின் ரொறன்ரோவில் உள்ள லெஸ்டர் பி. பியர்சன் சர்வதேச விமான நிலையத்தை சென்றடையும்.
வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் இந்த விமானச் சேவை நடைமுறையில் இருக்கும்.
இந்நிலையில் மீண்டும் கனடா- ரொறன்ரோவில் இருந்து இந்தியாவிற்கு சென்று பின்னர் இலங்கையை வந்தடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.