ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸவின் அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
2019ஆம் ஆண்டு அமெரிக்க பிரஜாவுரிமையை இழந்தவர்களின் பெயர் பட்டியல் நவம்பர் மாதம் 12ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.
எனினும் குறித்த பெயர் பட்டியலில் கோட்டபாயவின் பெயர் உள்வாங்கப்படவில்லை.
அவ்வாறாயின் கோட்டாபய இன்னும் அமெரிக்க பிரஜை தான் என்ற உண்மை வெளியாகி உள்ளது.
இலங்கை அரசியலமைப்புக்கு அமைய தேர்தல் ஒன்றில் போட்டியிடும் ஒருவர் வெளிநாட்டு குடியுரிமையை கொண்டிருக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக கோட்டபாய ராஜபக்ஷ களமிறங்குவதற்காக தனது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்ய விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அவரது அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டதாகஅறிவிக்கப்பட்ட நிலையில் அவருடைய பெயர் உள்வாங்கப்படாமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.