புதிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தீவிர ஆதரவாளரான பெண்ணொருவரின் வீட்டுக்குள் நுழைந்து அவரை கடுமையாக தாக்கிய பொதுஜன பெரமுனவின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரையும், மூன்று ரௌடிகளையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்க மாத்தளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாத்தளை, கொட்டுவகெதர பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த கோரச்சம்பவம் நடந்தது.
பெரமுனவின் கூட்டத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த பிரதேசசபை உறுப்பினரும், ரௌடிகளும் திடீரென சஜித் ஆதரவு பெண்மணியின் வீட்டுக்குள் நுழைந்தனர். சில பெரமுன காரர்கள் அவரது வீட்டை சுற்றிவளைத்திருக்க, பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளனர்.
மூன்று பிள்ளைகளின் தாயாரான ஆர்.ராமியலதா என்பவரே தாக்கப்பட்டார்.
படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று ரௌடிகளை கைது செய்த பொலிசார், நீதிமன்றத்தில் முற்படுத்தினார்கள். நாளை வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.