சில விசயங்களில் சிலருக்கு ஆர்வமிருக்கும். சில விசயங்களில் சிலருக்கு வெறித்தனமிருக்கும். அஜீத்குமார் இரண்டாவது வகையானவர்.
யாரது அஜீத் குமார்? எதில் வெறித்தனமாக இருக்கிறார் என்பதே சுவாரஸ்யமான தகவல்.
கடலூர் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த அஜீத்குமார் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் பைக்கில் வேகமாக சென்று அரசுப் பேருந்தை வழிமறித்துள்ளார். அத்துடன் பைக்கின் மீது படுத்து கொண்டு ‘என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே ‘ என்று பாடலுக்கு டிக் டாக் செய்துள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் இளைஞரை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைத்தனர்.
இது இளைஞர்களிற்கு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காக, டிக் டாக் வெறியில் சுற்றித்திரிந்த அஜீத்குமாரை போலீசார் அவரது வாகனத்துடன் வளைத்து பிடித்தனர்.
அஜீத்குமார் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே ஒருமுறை பச்சிளம் குழந்தையை படுக்கவைத்து அதன் தலைக்கு மேலே கயிற்றில் தொங்கியபடி டிக் டாக் செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார் அஜீத்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.