பாராளுமன்றத்தின் விசேட அமர்வொன்று இன்று (11) காலை 11.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக சபைத் தலைவரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
தேசிய விளையாட்டுக்களின் போது இடம்பெறும் சூதாட்டத்தை ஒழிப்பது தொடர்பான சட்டத்தை நிறைவேற்றுவது இன்றைய கூட்டத்தின் நோக்கம் எனவும் அவர் கூறினார்.
இவ்வாறான சூதாட்டக் காரர்களினால் விளையாட்டு வீரர்களுக்கும் அழுத்தங்களும், அச்சுறுத்தல்களும் விடுக்கப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த சட்ட மூலம் கடந்த வெள்ளிக்கிழமை சபையில் கொண்டுவரவிருந்தோம். முக்கிய காரணங்களுக்காக இது தவறவிடப்பட்டுள்ளது. இதனாலேயே இன்றைய தினம் இந்த சட்ட மூலம் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, இதற்கு எதிராக கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால,
இந்த சட்ட மூலத்தை பொருத்த மற்ற ஒரு நேரத்தில் அரசாங்கம் நிறைவேற்ற முயற்சிப்பது, இன்னுமொருவரின் தேவையை நிறைவேற்றுவதற்கே ஆகும் என குறிப்பிட்டார்.