சவுதியில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், என்னை பூட்டி வைத்து கொடுமைபடுத்துவதாகவும், நீண்டகாலம் வாழமாட்டேன், என்னை காப்பாற்றுங்கள் என்று கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆசியாவின் வங்கதேசத்தை சேர்ந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை வீட்டின் முதலாளிகள் தன்னை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்துவதாகவும், பட்டினி கிடப்பதாகவும், நான் நீண்ட காலம் வாழமாட்டேன், என்னை காப்பாற்றுங்கள் என்று முகத்தில் கொஞ்சம் பயத்துடன், கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.[
அந்த வீடியோ அவர் சுடு எண்ணெய்யால் ஏற்பட்ட காயங்களை காட்டுகிறார். அதோடு மட்டுமின்றி அவர் இந்த வீடியோவை மிகுந்த பயத்துடன் அங்கிருந்து எடுக்கிறார். 15 நாட்கள் என்னை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைபடுத்துகிறார்கள்.
முதலில் ஒரு இடத்தில் வேலை செய்தேன், அங்கு இது போன்ற கொடுமைகளை சந்தித்தேன், தற்போது நான் மாறியிருக்கும் இடத்திலும் இது போன்ற சித்ரவதைகளை அனுபவித்து வருகிறேன், என்னை காப்பாற்றுங்கள், இங்கிருந்து அழைத்து செல்லுங்கள் என்று கெஞ்சுகிறார்.
குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதால், அந்தநாட்டு மக்கள் இவர் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்று கூறி வருகின்றனர். வங்கதேசத்தில் இருக்கும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் அவர் குறித்து விவரம் அறிய முயற்சி செய்த போது, எந்த பலனும் கிடைக்கவில்லை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து வங்கதேசத்தில் இருக்கும் அரசு சாரா அமைப்பான பி.ஆர்.ஐ.சி. அந்த பெண்ணை சொந்த நாட்டிற்கு அழைத்து வர தீவிரமாக முயற்சி செய்து வருகிறது
கடந்த 1991 முதல் சுமார் 300,000 வங்கதேச பெண்கள் வளைகுடா தேசத்திற்கு வேலைக்காக பயணம் செய்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள் அனைவரும் நல்ல ஊதியத்துடன் நல்ல வேலை கிடைக்கும் என்று சில ஏஜென்சிகளின் பேச்சை நம்பி அங்கு சென்று இது போன்ற சித்ரவதைகளை அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த மாதம் மட்டும் சவுதி அரேபியாவில் இருந்து மொத்தம் 110 பெண்கள் நாடு திரும்பியதாகவும், அதில் 61 சதவீதம் பேர் சவுதியில் வேலை பார்க்கும் போது, அங்கிருக்கும் முதலாளிகளால் உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும்,
14 சதவீதம் பேர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ளனர்.