அபிஷேகம் இறையருளைப் பரிபூரணமாகப் பெற்றுத் தரும். அபிஷேக வேளையில் தெய்வ மூர்த்தங்களிலிருந்து அளவிட முடியாத ஆற்றல் வெளிப்படும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.
மேலும் அபிஷேகத்தின்போது, ‘ஓம்’ என்று தொடங்கி குருக்கள் சொல்லும் மந்திரம் தெய்வ விக்கிரகங்களை அடைந்து மீண்டும் பக்தர்களிடம் சேர்கிறது.
அபிஷேகம் செய்யப்படும்போது உருவாகும் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் இணைந்து காற்றில் பரவி பக்தர்களின் உடலுக்குள் சென்று புத்துணர்ச்சியை ஏற்படுத்துகின்றன என்பது பெரியோர்களின் கருத்து.
நம் மூதாதையர் அபிஷேக திரவியங்கள் தடையின்றி கிடைக்கும் வகையில், அந்த காலத்தில் பலவகை மானியங்களைக் கோயில்களுக்கு வழங்கி இருக்கின்றனர்.
பல விதமான பொருள்களை கொண்டு அபிஷேகம் செய்கின்றனர். ஒவ்வொரு அபிஷேகத்திலும் ஒவ்வொரு விதமான நன்மைகள் கிடைகின்றன. அந்த நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மஞ்சள் பொடி
மஞ்சள் பொடியில் அபிஷேகம் செய்தால் ராஜ வசியம் கிடைக்கும். அதாவது அரசாங்க அனுகூலம் கிடைக்கும்.
திரு மஞ்சன பொடி
திரு மஞ்சன பொடியில் அபிஷேகம் செய்தால் கிரக தோஷம் நீங்கும்.
அரிசி மாவு
அரிசி மாவில் அபிஷேகம் செய்தால் கடன் பிரச்சனை விலகும். நிம்மதியா வாழலாம்.
சந்தனாதி தைலம்
நீங்க அதிகமா வயிறு வலி பிரச்சனையில் அவதிப்படுபவரா உடனை சந்தனாதி தைலம் அபிஷேகம் பண்ணுங்க. ஏனென்றால் சந்தனாதி தைலம் அபிஷேகம் செய்தால் வயிறு உபாதை நீங்கும்.
பஞ்சாமிர்தம்
பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்தால் செல்வம் செழித்தோங்கும்.
தேன்
தேனில் அபிஷேகம் செய்தால் நல்ல சரீரம் கிடைகும். மேலும் குரல் வளம் பெருகும்.
நெய்
நெய் அபிஷேகம் செய்பவர்களுக்கு மோட்ச்சத்தை கொடுக்கும்.
பால்
யாரும் சீக்கரத்தில் இறக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. அப்படி பட்ட உங்களுக்கு ஆயுள் விருத்தி உண்டாக வேண்டுமென்றால் பால் அபிஷேகம் செய்யுங்கள்.
தயிர்
நீங்கள் பிள்ளை பாக்கியம் இல்லாமல் வேதனையுடன் இருப்பவரா உடனை தயிர் அபிஷேகம் செய்யுங்கள். புத்திர பாக்கியம் பெற்று சந்தோஷமாக வாழலாம்.
சாத்துக்குடி
துன்பம் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. ஆகவே துன்பம் விலகி இன்பத்துடன் வாழ வேண்டுமானால் சாத்துக்குடி அபிஷேகம் செய்து வாருங்கள்.
ஆரஞ்சு
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. இந்த பழமொழிக்கு ஏற்ப நோய் இல்லாமல் ஆரோகியமாக வாழ வேண்டுமானால் ஆரஞ்சு அபிஷேகம் பண்ணுங்கள்.
கரும்பு சாறு
உங்கள் உடல் நலம் காக்க பட வேண்டுமானால் கரும்புச்சாறு அபிஷேகம் பண்ணுவது சிறந்தது.
எலுமிச்சம் பழம்
எலுமிச்சம் பழம் அபிஷேகம் செய்து வந்தால் எம பயம் நிவிர்த்தியாகும்.
இளநீர்
உயர்ந்த பதவியை விரும்பாதகவர்கள் ஒருவரும் இருக்க முடியாது .உங்களுக்கு நல்ல பதவி கிடைக்க வேண்டுமென்றால் இளநீர் அபிஷேகம் செய்யுங்கள்.
நெல்லி பொடி
நெல்லி பொடி அபிஷேகம் செய்தால் ரோகத்தை போக்கும்.
பன்னீர்
மன அமைதியுடன் சந்தோஷமாக வாழ வேண்டுமானால் சந்தோஷத்தை கொடுக்கும் பன்னீர் அபிஷேகம் செய்யுங்கள்.
சந்தனம்
சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் கீர்த்தியை கொடுக்கும்.