Loading...
காலி, கராப்பிட்டிய பகுதியில் தப்பிச் செல்ல முற்பட்ட சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
நேற்றைய தினம் குறித்த நபர் 33 கிரோம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை தப்பிச் செல்ல முயன்ற குறித்தநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
Loading...
இவ்வாறு உயிரிழந்தவர் போத்தல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனவும், அவர் மீது நான்கு நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளதாகவும் பொலிஸார் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந் நிலையில் அவரை இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்த குறிப்பிடத்தக்கது.
Loading...