மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிர்வரும் காலங்களில் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோடத்தபாய ராஜபக்சவோடு இணைந்து அதிகளவிலான சம்பளத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் பெற்று கொடுப்பார் என ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொட்டகலை பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இன்று (12) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உறையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த செந்தில் தொண்டமான்,
கடந்த மஹிந்த அரசாங்கத்தின் போது மலையகத்தில் வீதி மற்றும் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளபட்டதோடு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்த அளவில் காணப்பட்டது.
தற்பொழுது வீதி அபிவிருத்திகளும் இடம்பெறுவதில்லை நாளுக்கு நாள் பொருட்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது.
எப்படி மக்கள் நாளாந்த வாழ்க்கையினை மேற்கொள்ள முடியும். இது போன்ற ஒரு அரசாங்கத்திற்கு மக்கள் தொடர்ந்தும் வாக்களித்தால். கடந்த ஐம்பது வருட காலமாக சேமித்து வைக்கபட்ட ஈ.பி.எப்.பணம் அனைத்தும் சிங்கபூர் சென்றுள்ளது.
மீண்டும் அந்த பணத்தினை கொண்டு வர வேண்டுமானால் மஹிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருக்கு மக்கள் பலத்தை வழங்க வேண்டும்.
சிங்கம் எப்போதுமே சிங்களாகத்தான் வரும் அதேபோல் தான் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் சிங்களாகத்தான் வருவார்.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 08ம் திகதி தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சை ஆறுமுகன் தொண்டமான் ஒப்படைக்கும் போது மலையகத்தில் 36000 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் ஐம்பதாயிரம் வீடுகள் கட்டுவதாக கூறினார்கள்.
ஆனால் இதுவரையிலும் வீடுகளை காணவில்லை தலவாக்கலையில் இடம்பெற்ற கட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் தனிவீட்டுத்திட்டத்தை கொண்டு வந்ததாக கூறுகிறார்கள்.
அதனை நான் மறுக்கவில்லை ஏன் என்றால் அவர்களால் கட்டப்பட்ட தனிவீட்டுத்திட்டம் தனியாகத்தான் காணப்படுகிறது. மனிதர்கள்யின்றி கட்டப்பட்ட பத்து வீடுகள் ஒன்பது வீடு காற்றில் பறந்து மிச்சம் ஒரு வீடு தனியாகவே காணப்படுகிறது.
ஆனால் கடந்த 30 வருடத்திற்கு முன்பு செளமியமூர்த்தி தொண்டமானும் கடந்த காலங்களில் ஆறுமுகன் தொண்டமான் கட்டிய வீடுகளும் உருதியாக காணப்படுகிறது இங்கு ஆடைகள் தொங்குகிறது அங்கு கூறைகள் தொங்குகிறது.
கட்டப்பட்ட 3000 வீடுகளில் 1500 வீடுகள் காற்றில் பறந்து விட்டன. இவ்வாறு அபிவிருத்தி திட்டங்களை பார்த்து தான் மலையக மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
இன்று சிலர் கூறுகிறார்கள் காணி உரிமை நாங்கள் பெற்று கொடுத்ததாக மார்பு தட்டி கொள்கிறார்கள்.
காணி உரிமையை பெற்று கொடுத்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்கள்.
இன்று பிரச்சாரம் செய்கிறார்கள் மலையக மக்களுக்கு பத்து பேர்சஸ் காணி வழங்க போவதாக. நான் ஒன்று கேட்கிறேன் ஏன் இந்த ஐந்து வருட காலமாக மலையக மக்களுக்கு ஏழு பேர்சஸ் காணி வழங்கினீர்கள். இது போன்ற பொய்யான வாக்குறுதிகளையே இவர்கள் வழங்கி வருகிறார்கள்.
தொழிலாளர்களுக்கு வழங்குவதாக கூறிய 50 ருபாவிற்கு எமது தலைவரிடம் ஒத்துழைப்பு தருமாறு கோருகிறார்கள் என்றார்.