பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு அவரது மனைவியும், மகனும் வாக்களிக்க முடியாது என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஏனெனில் அவர்கள் இருவரும் அமெரிக்க பிரஜைகள் என்றும் குறிப்பிட்ட அவர் அமெரிக்க பிரஜைகளிற்கு நாம் ஏன் வாக்களிக்க வேண்டும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார் .
இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசியபோதே அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் கோட்டாபயவின் மனைவி எந்த நாட்டு பிரஜை என கேட்டபோது, அலி சப்ரி அது தேவையற்றதென கூறுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர் அவர் அமெரிக்க பிரஜைகள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியாதெனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே மனைவி, மகன் கூட வாக்களிக்க முடியாத ஒரு அமெரிக்க பிரஜைக்காக நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்? என்றும் அவர் கூறியுள்ளார்.
கோட்டாவின் குடியுரிமை இரத்து செய்யப்பட்ட விபரம், இம்முறையும் வெளியாகவில்லை. ஆனால், கோட்டா தனது குடியுரிமையை நீக்கி விட்டதாக சொல்கிறார். அப்படியானால், கோட்டா விசேடமானவரா? அவர் என்ன அமெரிக்க உளவாளியா? எனவும் ஹரின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் கோட்டாவின் குடியுரிமை தொடர்பில் தனது முகநூலில் தான் பதிவிட்ட நிலையில் அதன்பின்னர் அது நீக்கப்பட்டதாக கூறுகிறார்கள் எனினும் அந்தபதிவை தான் நீக்கவில்லை எனவும் ஹரின் கூறியுள்ளார்.
அவர்கள் ஒரு வலையமைப்பாக செயற்பட்டு, பேஸ்புக்கிற்கு முறையிட்டு தந்து பத்வை அகற்றியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் , அதிகாரமில்லாத நிலையிலேயே எப்படி வலையமைப்பாக செயற்பட்டு வருகிறார்கள் என்பதை பாருங்கள் என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.