சஜித்தின் விஞ்ஞாபனத்தில் சில விடயங்களை துணிச்சலாக சொல்லியுள்ளார். எனினும், அவர் அதை செய்வாரா இல்லையா என்பது தெரியாது. தெற்கு நிலவரங்கள் அவர் வெற்றிபெற மாட்டார் என்று சொல்கின்றன என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.
யாழில் இன்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மைத்திரியுடன் இதயத்தால் நாம் ஒப்பந்தம் செய்தோம் என்பதை பலர் நக்கல் அடிக்கிறார்கள். நாம் எதையும் செய்யவில்லையென்கிறார்கள். நாம் நிறைய செய்தோம். ஆனால் முடியவில்லை.
அரசியல் கைதிகளில் மூன்றில் இரண்டு பங்கினரை ஒரு வருடத்திற்குள் விடுவித்துள்ளோம். ஒவ்வொரு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்காகத்தான் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் அமைக்கப்பட்டது. ஆனால் அது சரியாக இயங்கவில்லை.
தென்பகுதியில் சஜித் வெற்றிபெற முடியாதென்ற செய்தி வருகிறது. தமிழ் மக்கள் வாக்களித்து அதை மாற்ற வேண்டும் என்றார்.