Loading...
38 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை வான் வழி மற்றும் சேவை வழங்குதல் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் வெளிநாட்டு விமானங்களிடம் அறவிடப்படும் கட்டணங்கள் 57 வீதமாக அதிகரிக்கப்பட உள்ளன.
Loading...
இந்த புதிய கட்டண அதிகரிப்பு காரணமாக நாளாந்தம் கிடைக்கும் வருமானம் 6 மில்லியனாக அதிகரிக்கும் என போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வான் வழியாக தினமும் 125 விமானங்கள் பயணிக்கின்றன. இவ்வாறு இலங்கை வான் வழியை பயன்படுத்தும் விமானங்கள் மூலமாக தினமும் 3.9 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...