தனது கைத்தொலைபேசியில் கால்பந்து பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
தாய்லாந்தில் இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்தது.
சோமச்சாய் சிங்கார்ன் (40) என்ற சமையல்காரர், தான் பணியாற்றும் உணவகத்தில், நேற்று புதன்கிழமை, ஒரு கையில் பியர் ரின்னுடன் கட்டிலில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது காதில் ஹெட்ஃபோன் செருகப்பட்டிருந்தது. கையடக்க தொலைபேசியில் கால்பந்து போட்டியொன்று ஒளிபரப்பாகிருந்தது.
அவரது கையக்க தொலைபேசி சார்ஜரில் இணைக்கப்பட்டிருந்தது. சார்ஜர் வயர் அவரது உடலின் கை, கழுத்தில் பட்டிருந்தது. அந்த இடங்களில் தீக்காயம் காணப்பட்டது.
சக பணியாளரான லாவோசை சேர்ந்த சாங், தனது நண்பருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக நினைத்து, உஉணவக உரிமையாளரை அழைத்துள்ளார். உரிமையாளர் வந்து சோதனையிட்டபோதே, அவர் உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.
சோம்ச்சாய் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு இசையைக் கேட்பது அல்லது அவரது தொலைபேசியில் கால்பந்து பார்ப்பது சாதாரணமானது என்று சாங் கூறினார்.
‘அவர் தூங்குவதற்கு முன்பு எப்போதும் தொலைபேசியில் கவனம் செலுத்துவார். நேற்றிரவு நான் கடைசியாக அவரை உயிருடன் பார்த்தபோது, மற்ற இரவுகளைப் போலவே அவர் அதைச் செய்து கொண்டிருந்தார். அவர் கால்பந்து பார்த்துக்கொண்டிருந்தார். காலையில் நான் அவரை எழுப்பச் சென்றேன், ஆனால் அவர் நகரவில்லை, எனவே அவர் நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என்று நான் கவலைப்பட்டேன். நான் எங்கள் முதலாளியைத் தொடர்பு கொண்டேன். அவர் சோதனைக்கு வந்தபோது, சோம்சாய் இறந்துவிட்டார் என்று என்னிடம் கூறினார்’ என்றார்.
தொலைபேசி சார்ஜர் வழியாக மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.