இலங்கையின் 07வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 08ஆவது ஜனாதிபதி தேர்தல் இன்று சனிக்கிழமை இடம்பெறுகின்றது.
ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரம் வாக்காளர்கள் இன்றைய தினம் காலை 07 மணி தொடக்கம் மாலை 05 மணி வரை நாடளாவிய ரீதியில் 12845 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கவுள்ளனர்.
இலங்கையின் முடற்தடவையாக இம்முறை 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 26 அங்குல வாக்குசீட்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி தேர்தல் வாக்களிப்புக்கள் fகாலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவடைந்த பின்னர் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 43 தேர்தல் வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்கு மிகுந்த பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் கொண்டுசெல்லப்படும்.
சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் தேர்தல் கடமைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலுக்காக 12,845 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் மற்றும் அதிகாரிகளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வாக்களிப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 3 இலட்சம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்றைய தினம் தபால் மூல வாக்களிப்பின் முதலாவது முடிவை நள்ளிரவிற்கு முன்னதாக வழங்க முடியும் எனவும் பெரும்பாலும் அது இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவாக இருக்கக்கூடும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.
மேலும், தொகுதிவாரியான முடிவுகளின் முதலாவது முடிவை அதிகாலை 2 மணிக்காவது வழங்க முடியும் என்றும் காலை 8 மணியாகும்போது அரைவாசிக்கும் மேல் முடிவுகளை வௌியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஊனமுற்ற அல்லது விசேட தேவைகளைக் கொண்ட வாக்காளர்களுக்காக விசேட வசதிகள் செய்யப்படுகின்றன.
இதற்கு தேவையான ஆலோசனைகள் வாக்களிப்பு மத்திய நிலைய பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவைர் மஹிந்த தேசப்பிரய தெரிவித்துள்ளார்.