சாதாரண வயிற்றுடன் இருந்த மொடல் அழகிக்கு திடீரென குழந்தை பிறந்துள்ள சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த 23 வயதான மாடலான லாங்மெய்ட் என்கிற மொடல் அழகிக்கு இரண்டு வாரத்திற்கு முன்பு திடீரென கடுமையான வயிற்றுப் பிடிப்பு ஏற்பட்டுள்ளது.
உடனே அவர் வேகமாக குளியலறைக்கு சென்றுள்ளார். அடுத்த 10 நிமிடங்களிலே அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
அடிக்கடி கருத்தடை மாத்திரைகள் எடுத்திருந்த போதிலும், வயிற்றிலும் எந்த அறிகுறியும் இல்லாத சமயத்தில் திடீரென குழந்தை பிறந்தது அவரை ஆச்சர்யமடைய வைத்துள்ளது.
இதற்கிடையில் சத்தம் கேட்டு மாடிக்கு ஓடிய அவருடைய காதலன் டேனியல் கார்ட்டி, தன்னுடைய காதலி கையில் குழந்தையுடன் இருப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் குழந்தையின் நிறம் ஊதாவாக மாறியுள்ளது. உடனடியாக இந்த தகவல் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் சிகிச்சைக்கு பின்னர் குழந்தை நலமுடன் இருப்பதை புகைப்படம் எடுத்து தம்பதியினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், லாங்மெய்ட் கூறுவது அதிர்ச்சியாக இருந்தாலும் உலகில் 2500 பெண்களில் ஒருவர் இதுபோன்ற அறிகுறிகள் எதுவும் இல்லாமல் குழந்தை பெறுகின்றனர் எனத்தெரிவித்துள்ளனர்.