இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 8 ஆவது ஜனாதிபதியை தேர்ந்தேடுப்பதற்கு இன்னும் இருப்பது சில மணித்தியாலங்களே.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற்றவண்ணம் உள்ளது.
வாக்களிப்பது எப்படி?
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 24 அங்குலம் கொண்ட நீளமான வாக்குசீட்டு வழங்கப்படவுள்ளது.
இந்த வாக்குசீட்டில் நீங்கள் வாக்களிக்க விரும்பும் வேட்பாளரின் பெயர் சின்னம் ஆகியவற்றை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
வழமைக்கு மாறாக மிக நீளமான வாக்குசீட்டு என்பதால் நீங்கள் வாக்களிக்கும் வேட்பாளரை அடையாளம் காண்பதில் சில நிமிடங்கள் செலவிடவேண்டியிருக்கும்.
வாக்களிப்பதற்கு மிக முக்கியமான கவனிக்க வேண்டியது. முதலாவது நீங்கள் ஒருவருக்கு வாக்களிக்க விரும்பினால் வாக்களிக்க விரும்பும் நபரின் பெயர் சின்னம் என்பவற்றை சரி பார்த்து அதன் அருகில் உள்ள நிரலில் புள்ளடி (X) அடையாளம் இட வேண்டும், அவ்வாறு இல்லையெனில் 1 என அடையாளமிடலாம்.
அதை தவிர்த்து நீங்கள் வேறு ஒருவருக்கும் உங்கள் விருப்பை தெரிவிக்க விரும்பினால் அதாவது ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு வாக்களிக்க விரும்பினால் உங்கள் வாக்குசீட்டில் 1,2,3 என அடையாளமிட்டு வேண்டும். விருப்பு வாக்குகள் அளிக்கும் போது புள்ளடி (X) இட கூடாது.
நிராகரிக்கப்படும் வாக்குகள்.
நீங்கள் வாக்களிக்கும் போது உங்கள் விருப்பு வாக்கை மூவருக்கு வழங்கலாம். அதற்கமைய 1,2,3 என மாத்திரம் வாக்குசீட்டில் அடையாளமிடலாம். அதை தவிர்த்து நீங்கள் விரும்பும் நபருக்கு புள்ளடியும் (X) இட்டு இலக்கம் 1 யும் அடையாளமிட்டால் உங்கள் வாக்கு நிராகரிக்கப்படும்.
அதேநேரத்தில் விருப்பு வாக்கும் வழங்கும் போது இருவருக்கு அல்லது மூவருக்கும் புள்ளடி (X) இட கூடாது. அவ்வாறு அடையாளமிட்டாலும் உங்கள் வாக்கு நிராகரிக்கப்படும்.
மேலும் வாக்குசீட்டில் நீங்கள் வாக்களிக்க விரும்பும் நபரின் பெயருக்கும் சின்னத்துக்கு அருகில் அதாவது அடையாளமிடப்பட வேண்டிய இடத்தில் வேட்பாளரின் பெயர் எழுதவோ அல்லது கிறுக்கவோ கூடாது.
அதே நேரம் விருப்பு வாக்கு வழங்கும் போது இலக்கம் 1 தவிர்த்து 2,3 என அடையாளமிடுதல், அல்லது புள்ளடி (X) 1,2,3 என அடையாளமிட்டால் உங்கள் வாக்கு நிராகரிக்கப்படும். எனவே தேவையற்ற விடயங்களை வாக்கு சீட்டில் பதிவிடுவதால் நிராகரிக்கப்படும்.
வாக்களிக்க தேவையான விடயங்கள்
நீங்கள் வாக்களிக்க செல்லும் போது உங்கள் அடையாளத்தை உறுதி படுத்தக்கூடிய ஆவணங்களை கொண்டு சென்று உங்கள் வாக்குகளை பதிவிடலாம்.
இதேவேளை அனைத்து மக்களும் தமது வாக்கை வழங்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் ஆணைக்குழு கண்டிப்பான விபரத்தை வெளியிட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் நிறுவங்களின் வேலைசெய்பவர்களுக்கு கண்டிப்பாக விடுமுறை அளிக்குமாறு தெரிவித்துள்ளது.
இதற்கமைய 40 கிலோ மீட்டருக்கு குறைவான தூரத்தில் உள்ளவர்களுக்கு அரை நாள் விடுமுறை வழங்க வேண்டும் எனவும், 40-100 கிலோமீட்டருக்குள் சொந்த இடமிருந்தால் ஒரு நாள் விடுமுறையும், 100-150 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பவர்களுக்கு ஒன்றரை நாள் விடுமுறையும்,150 கிலோமீட்டருக்கும் அதிகமாக தூரத்தில் இருந்தால் இரண்டு நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வாடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.