நடிகர் விஜய் சேதுபதி தனது மனைவியுடன் தங்களின் கல்ணாண நாளை கொண்டாடிய போட்டோக்கள் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி தனது திறமையை வெளிப்படுத்தும் கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தன்னுடைய தனித்துவமான நடிப்பால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி தயாள குணம் கொண்டவர். ஏழை எளிய மக்கள், திறமையான மாணவ, மாணவிகள் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தாலே ஓடிப்போய் உதவும் மனம் படைத்தவர்.
இந்நிலையில் அண்மைக் காலமாக இவரது நடிப்பில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் இவரது கிராஃப் சற்று சரிந்துள்ளது.
இன்று வெளியாகும என்று எதிர்பார்க்கப்பட்ட சங்கத்தமிழன் படமும் சர்ச்சைகளால் தள்ளிப்போயிவிட்டது. தனியார் நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் நடித்ததால் வணிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.
இந்த பிரச்சனைகள் எல்லாம் ஒரு புறம் இருக்க விஜய் சேதுபதி தனது மனைவியுடன் தனது திருமண நாளை குழந்தைகள் சகிதமாக ஜாலியாக கொண்டாடியிருக்கிறார். விஜய் சேதுபதிக்கு நேற்று திருமண நாள் என தெரிகிறது.
கல்யாண நாளை முன்னிட்டு அவரது மனைவியுடன் சேர்ந்து கேக் வெட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த கேக்கை அவரின் குழந்தைகள் ஏற்பாடு செய்துள்ளனர் போல. அதில் அம்மா அப்பா என குறிப்பிட்டுள்ளனர்.
கேக்கை நடுவில் வைத்து விஜய் சேதுபதி அவரது மனைவியின் கையை இறுகப் பற்றியிருக்கிறார். விஜய் சேதுபதி தனது மனைவியுடன் இருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் நீங்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிதான், அதனால்தான் உங்களுக்கு இப்படி ஒரு கணவர் கிடைத்திருக்கிறார் என்றும் விஜய் சேதுபதி குறித்து அவரது மனைவிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.