அன்றாடம் நாம் அழகு தொடர்பாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம். நமக்கு ஏற்படும் அழகு பிரச்சனைகள் அனைத்திற்கும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்தி இருப்போம்.
ஆனால் அந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் முழுமையான நிரந்தர தீர்வாக இருந்தது இயற்கையான பொருட்கள் மட்டுமே. அந்த வகையில் பார்க்கும் போது, இன்றைய காலத்தில் உப்பை நமது உணவில் சேர்ப்பதற்கு பதிலாக அழகு தொடர்பான இதர பிரச்சனைகளுக்கு தீர்வாக சிறந்த முறையில் உப்பானது பயன்பட்டு வருகின்றது.
எனவே உப்பு நம்முடைய அழகு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை தருவதால், நாம் தினமும் தலைமுடிக்கு போடும் ஷாம்பு மற்றும் இதர அழகு சாதன பொருட்களுடன் உப்பை சேர்த்து பயன்படுத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
அழகுப் பொருட்களுடன் உப்பை சேர்த்து பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
* தலையில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், அதற்கு ஷாம்புடன் 3 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து, பின் அதனை தலைக்கு பயன்படுத்த வேண்டும். இதே போல் வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை முழுமையாக நீங்கிவிடும்.
* 1/2 கப் தேங்காய் எண்ணெயுடன், 2 டேபிள் ஸ்பூன் கல் உப்பை சேர்த்து கலந்து, பின் அதை நம்முடைய உடல் முழுவதும் நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இதனால் நமது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமம் அழகாகவும், பொலிவாகவும் இருக்கும்.
* நமது பாதங்களில் உள்ள அழுக்குகள் மற்றும் குதிகால் வெடிப்பை நீக்குவதற்கு, ஆலிவ் ஆயிலுடன், உப்பை சம அளவில் கலந்து, பாதங்களில் தடவி, பின் ஊற வைத்து நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும். இதே போல வாரம் இரண்டு முறை செய்து வந்தால், பாதங்களில் உள்ள வறட்சி மற்றும் குதிகால் வெடிப்புகள் முற்றிலும் மறைந்துவிடும்.
* வெட்டு காயங்களில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுப்பதற்கு, 2 டீஸ்பூன் உப்பை ஒரு டம்ளர் நீரில் கலந்து, வெட்டு காயங்களின் மீது ஊற்ற வேண்டும். இதனால் ஆரம்பத்தில் சிறிது நேரம் எரிச்சலாக, இருந்தால் விரைவில் குணமாகிவிடும்.
* ஒரு டம்ளர் தண்ணீரில், 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து குடித்தால், 15 நிமித்தில் தாங்க முடியாத மற்றும் தொடர்ச்சியான தீராத தலைவலிகள் விரைவில் குணமாகிவிடும்.