ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கோத்தபாய ராஜபக்ச பின்னடைவு கண்டுள்ளார்.
குறிப்பாக கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செல்வாக்கு செலுத்தினார்.
எனினும் இம்முறைய ஜனாதிபதி தேர்தல் அந்தத் தொகுதிகளை ராஜபக்ச தரப்பினர் இழந்துள்ளனர்.
2015இல் நல்லூர் தொகுதியில் மஹிந்தவுக்கு 5,405 வாக்குகள் கிடைத்திருந்த போதும், இம்முறை கோத்தபாய ராஜபக்சவுக்கு,1,836 வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளன.
வன்னி மாவட்ட தபால் மூல வாக்குகளில், 2015இல் மஹிந்தவுக்கு 2940 வாக்குகள் கிடைத்திருந்தன. எனினும் இம்முறை கோத்தபாய ராஜபக்சவுக்கு 1,703 வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளன.
ஊர்காவற்றுறை தொகுதியில் 2015இல் மஹிந்தவுக்கு 5,959 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், இம்முறை கோத்தபாய ராஜபக்சவினால், 2917வாக்குகளை மாத்திரமே பெற முடிந்துள்ளது.
அதேவேளை இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளுக்கு அமைய கோத்தபாய ராஜபக்ச அதிகபடியாக வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.