இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் தற்போது இரத்தினபுரி மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.
நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை மறுநாள் திங்கட்கிழமை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, சஜித் பிரேமதாச 7,940 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 19,061 வாக்குகளையும், அநுரகுமார 1,678 வாக்குகளையும், பெற்றுக்கொண்டுள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 29,716, அளிக்கப்பட்ட வாக்குகள் 29,383, செல்லுபடியான வாக்குகள் 29,005, நிராகரிக்கப்பட்டவை 378.