இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் தற்போது வன்னி மாவட்ட தேர்தல் தொகுதிக்கான தபால் மூல வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.
தபால் மூல வாக்கெடுப்பில் வன்னியில் சஜித் முன்னிலை; சிவாஜி மூன்றாவது தபால் மூல வாக்கில் வன்னி தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச முன்னிலை பெற்றுள்ளார்.
வன்னித் தேர்தல் தொகுதியில் 9 வாக்கு எண்ணும் நிலையங்களில் தபால் மூல வாக்குகள் இன்று மாலை 5.30 வரை எண்ணப்பட்ட நிலையில் தற்போது மூன்று வாக்கு எண்ணும் நிலையங்களின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
அதில் சஜித் பிரேமதாச 2,673, கோத்தபாய ராஜபக்ஸ் 675, அனுரகுமார திஸாநாயக்க 37, சிவாஜிலிங்கம் 53, நிராகரிக்கட்ட வாக்குகள் 82, அளிக்கப்பட்ட வாக்குகள் 3583 ஆகும்.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில் தபால்மூலம் 10 ஆயிரத்து 472 வாக்குகள் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாளை ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை மறுநாள் திங்கட்கிழமை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.