பிறந்து ஒன்பது வாரங்களேயான குழந்தையை சுவற்றில் மோதியும், குழந்தையின் தொண்டையில் விரலால் அழுத்தியும் கொலை செய்துள்ள தந்தையின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அமெரிக்கா நாட்டின் St. Louis நகரில் வசித்து வருபவர் Robert Burnett (19), இவர் மனைவி Megan Hendrix (20) இவர்களுக்கு Jax என்னும் பிறந்து ஒன்பது வாரங்களான குழந்தை ஒன்று உள்ளது.
குழந்தை Jaxக்கு பிறக்கும் போதே எலும்பு சம்மந்தமான மற்றும் மூளையில் இரத்த கசிவு பிரச்சனையும் இருந்துள்ளது. சம்பவத்தன்று, குழந்தை Jax வீட்டில் ஓயாமல் அழுது கொண்டிருந்தான்.
அவன் அருகில் வந்த Robert குழந்தையின் அழுகையை சகிக்க முடியாமல் கொடூரமான ஒரு விடயத்தை கையாண்டுள்ளார். அதாவது குழந்தையை பயமுறுத்த அவன் தொண்டையில் தன் விரல்களை வைத்து அழுத்தியுள்ளார்.
பின்னர் குழந்தையை சுவற்றில் தூக்கி அடித்துள்ளார். இதில் குழந்தை மயங்கி விழ, Robert பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு நபர் அங்கு யதேச்சியாக வந்து குழந்தை மயங்கியிருப்பதை பார்த்து உடனே குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தும் குழந்தை உயிரிழந்து விட்டது.
இது குறித்து பொலிசாருக்கு தகவல் செல்ல அவர்கள் Robert மற்றும் Meganயை கைது செய்துள்ளார்கள்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், குழந்தை என்றும் பாராமல் Robert கொடூரமான செயலை செய்துள்ளார். அந்த செயலை அருகிலிருந்தும் தடுக்காததால் குழந்தையின் தாய் Megan யும் கைது செய்துள்ளோம்.
மேலும், அவர்கள் மனநிலை கோளாறு உள்ளவர்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இது குறித்து தற்போது தீவிரமான விசாரணையில் இறங்கியுள்ளோம் என பொலிசார் கூறினார்கள்.