விலங்கினங்களை அறவே பிடிக்காது எனக்கூறி வெறுத்து ஒதுக்கும் மனிதர்களிடம், நாங்களும் உங்களை போன்று உணர்வுகளை உள்ளடக்கிய ஒரு உயிரினம் தான் என சொல்லாமல் சொல்லியுள்ளது ஓரங்குட்டான் குரங்கு.
இங்கிலாந்தில் உள்ள உயிரியில் பூங்காவிற்று கர்ப்பிணி பெண் ஒருவர் தனது கணவருடன் சென்றுள்ளார்.
அங்கு விலங்கினங்களை ரசித்துக்கொண்டிருந்த அவரது பார்வை, கண்ணாடிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஓரங்குட்டான் குரங்கு மீது பட்டுள்ளது.
கண்ணாடிக்கு மிக அருகில் சென்ற அந்த கர்ப்பிணி பெண், தனது வயிற்றினை தடவிக்கொண்டு குரங்கினை பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது, கர்ப்பிணியின் வயிற்றினை உற்றுநோக்கிய குரங்கின் முகத்தில் ஒருவித மாற்றம் தென்பட்டது.
பின்னர், அக்குரங்கு மெதுவாக நெருங்கி வந்து கர்ப்பிணியின் வயிற்றில் முத்தமிட்டு சென்றது. இந்த காட்சி அங்கிருந்தவர்களின் இதயத்தை உருக்கியுள்ளது.
நம்மில் பலபேர் விலங்குகள் சரணாலயத்திற்கு செல்வதை விரும்புவதில்லை. ஆனால், பிறக்கவிருக்கும் குழந்தைக்கு முத்தமிட்டு, இந்த பூமியில் உயிரினங்களின் மதிப்பினை எடுத்துக்கூறியுள்ளது இந்த குரங்கு.
இதன் மூலம் பிறக்கவிருக்கும் குழந்தை, உயிரினங்கள் மீது அன்பு கொண்ட குழந்தையாக இருக்கும் என கர்ப்பிணி பெண் கூறியுள்ளார்.