பனிச்சங்கேணி பாலத்தை அண்மித்த வாவிப் பகுதியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் திருகோணமலை உவர்மலை பகுதியை சேர்ந்த 60 வயதான பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு வாகரைப் பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தை அண்மித்த வாவிப் பகுதியிலிருந்து இன்று இவ்வாறு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட பெண் தேவாலயம் செல்வதாகக் கூறி ஞாயிற்றிக்கிழமை மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியிலுள்ள தனது மகளுடைய வீட்டிலிருந்து வெளியில் புறப்பட்டு சென்றுள்ளார்.
இதன் பின்னர் அவர் காணாமல் போயிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுளார்.
தேவாலயத்திற்குச் செல்வதாகக் கூறிய அவர் அங்கு செல்லாமல் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்குச் செல்லும் பேருந்தில் ஏறிச் சென்றுள்ளார்.
திருகோணமலைக்குச் செல்வதற்கான பயணச் சீட்டை அவர் பெற்றிருந்த நிலையில் இடைவழியில் பனிச்சங்கேணி பாலத்தினை அண்மித்த பகுதியில் இறங்கியுள்ளாரென தெரியவந்திருப்பதாக விசாரணைகளில் ஈடுபட்டுள்ள வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.