நியூசிலாந்தில் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தின் அருகே மின்னல் தாக்கிய தருணத்தை பார்வையாளர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
கிறிஸ்ட்சர்ச் விமான நிலையத்தில் 15:30 மணிக்கு எமிரேட்ஸ் விமானமான ஏர்பஸ் ஏ-380 அருகே மின்னல் தாக்கிய காட்சியை கார்டன் சிட்டி ஹெலிகாப்டர்களில் இருந்து ஒரு விமானி வீடியோவாக எடுத்துள்ளார்.
வானிலை ஆய்வு மையம் நியூசிலாந்தின் இப்பகுதிக்கு இடியுடன் கூடிய எச்சரிக்கை விடுத்திருந்தது. கேன்டர்பரி பிராந்தியத்தின் சில பகுதிகள் கடுமையான புயல்களால் பாதிக்கப்பட்டன, ஆலங்கட்டி மழை பல இடங்களில் முட்டைகளின் அளவில் பொழிந்ததாக உள்ளுர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளுர் பாராளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரூ ஃபாலூன் திமாருவில் உள்ள தனது அலுவலகத்திற்கு வெளியே மழையாக பொழிந்த பெரிய ஆலங்கட்டி கற்களை படமாக்கினார்.
இப்பகுதியில் இரண்டு மணி நேர இடைவெளியில் 700 மின்னல் தாக்குதல்களை கண்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இப்போது, வானிலை எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளன.