Loading...
நானாட்டான் பிரதேசத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான கலாசார பெருவிழா நேற்று வியாழக்கிழமை (21) மாலை நானாட்டான் பிரதேச சபையின் கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.
நானாட்டான் பிரதேச செயலாளர் மா.கிறிஸ்கந்தகுமார் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் கலந்துகொண்டார்.
குறித்த நிகழ்வின் போது ‘நானிலம்’ எனும் நூல் வெளியீடு செய்யப்பட்டதோடு, நானாட்டான் பிரதேச கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
Loading...
குறித்த நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம் பெற்றது.இதன் போது சர்வமத தலைவர்கள்,திணைக்கள அதிகாரிகள்,பொது மக்கள் என நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Loading...