எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் உள்ள தொன்மையான ஒன்பது மண்டை ஓடுகளின் தொகுப்பு இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
சுமார் 200 ஆண்டுகள் பழைமையான இந்த உடல் எச்சங்கள், அவை புதைகக்ப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 100 வருடங்களின் முன்னர் தோண்டி எடுக்கப்பட்டது.
இலங்கையின் ஆரம்பகால வேடுவர் குடிமக்கள் தொடர்பான பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் ஆராய்ச்சிக்காக அவை எடின்பர் பல்கலைகழகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இலங்கையிலுள்ள வேடுவர் குல தலைவர் உருவாரிகே வன்னிலவிடம் அவை வழங்கப்படும்.
வேடுவர் சமூகத்தின் உயிரிழந்தவர்களிற்கு முக்கிய இடமுண்டு. உயிரிழந்தவர்கள் ஆவியாக தம்முடன் உள்ளதாக கருதி, ஒவ்வொரு ஆண்டும் பெரிய விழா எடுப்பது வழக்கம்.
இந்த ஆராய்ச்சியில் வேடுவர்களே இலங்கையின் பூர்வகுடிகள் என குறிப்பிடப்பட்டுள்ளதாக வேடுவர் குல தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
எடின்பர்க் பல்கலைக்கழகம் உடற்கூறியல் அருங்காட்சியகத்தில் 12,000 வலுவான உடற்கூறியல் எச்சங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அவை இப்போது மரபியல் வரலாறு, உணவு மற்றும் மக்களின் இயக்கம் பற்றிய ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன.
2008 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் நகரிண்ட்ஜெரி பழங்குடி மக்களுக்குரிய ஒரு காது எலும்பு திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது பெரிய திருப்பி ஒப்படைக்கும் நிகழ்வு இதுவாகும்.