சஜித் பிரேமதாசவின் தேர்தல் நடவடிக்கைகள் சீர்குலைக்கப்பட்டதாகவும், நிதி பிரச்சினை காணப்பட்டதாவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நிராகரித்தார்.
இன்று (22) முற்பகல் சிறிகொத்த கட்சி தலைமைகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
அவர் அங்கு உரையாற்றுகையில், “திட்டமிட்டபடி தேர்தல்கள் நடவடிக்கைகள் சிறிகொத்தவில் முன்னெடுக்கப்பட்டமை குறித்து நான் சான்றிதழ் அளிக்க முடியும்” என்றும் கூறினார்.
அத்துடன், கட்சியின் எதிர்காலம் குறித்து சிந்தித்து புதிய தலைவர் ஒருவரை முன்னிறுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பௌத்தர்கள் என்ற வகையில், ஜனாதிபதி தேர்தல் தோல்வி தொடர்பில் மற்றவர்கள் மீது விரல் நீட்டாமல், அதனை புரிந்துகொண்டு தவறுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ஜனாதிபதி தேர்தலுக்காக சிறிகொத்தவின் ஊழியர்கள் ஆற்றிய சேவைகளுக்கு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்தார்.