இலங்கையில் இனந்தெரியாத விசமிகளால் அரச பல்கலைக்கழக கல்லூரியின் கல்வெட்டுகள் உடைக்கப்பட்டு சேதமடைந்துள்ளது.
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் உப்பாறு பகுதியில் அமையப்பெறவுள்ள அரச பல்கலைக்கழக கல்லூரியின் கல்வெட்டு இனந்தெரியாத விசமிகளால் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.
அண்மையில் திறன் அபிவிருத்தி அமைச்சு மூலமாமாக உரிய அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் தலைமையில் உரிய பல்கலைக்கழக கல்லூரிக்கான அடிக்கல் நடும் நிகழ்வும் கல்வெட்டும் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரச சொத்துக்களை இவ்வாறு சேதமாக்கப்படுவது கவலையளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சேதமாக்கப்பட்டது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
புதிய அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்துவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.