யாழ்.மாவட்டத்தில் “நாடா” சூறாவளியினால் 57 குடும்பங்களை சேர்ந்த 150 பேர்பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள யாழ்.மாவட்ட செயலர் என்.வேதநாயகன், அவசர நிலைஉண்டாகுமானால் அதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு படையினர் தயார் நிலையில்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
நாடா சூறாவளியின் தாக்கம் தொடர்பாக இன்றைய தினம் மாலை மாவட்ட செயலர் ஊடகங்க ளுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
விடயம் தொடர்பாகமேலும் அவர் குறிப்பிடுகையில்,
மாவட்டத்தில் சூறாவளி காரணமாக சாவகச்சேரியைசேர்ந்த ஒருவர் உயிரிழந்திருக்கின்றார்.
இதேபோல் மருதங்கேணி மற்றும், மாதகல் பகுதிகளில் கடலுக்குசென்றவர்கள் காண மல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
மாதகல் பகுதியில் காணாமல்போன2 பேர் தொடர்பில் உள் ள போதும், அவர்கள் தொடர்பில் உள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் சாவகச்சேரி, கரவெட்டி, பருத்தித்துறை, வேலணை ஆகிய பகுதிகளில் 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அதேபோல் 1 வீடுமுழுமையாக சேதமடைந்துள்ளது.
அவசரகால நிலைமை உண்டாகவில்லை. அவசரகால நிலமைஉண்டாகுமானால் நிலமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு படையினர் தயாராகவே இருக்கின்றனர்.
அவசரகால நிலமைஉண்டாகுமானால் படையினரின் உதவியை பெறுமாறு சகல பிரதேச செயலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே அவசரகால நிலைமை உருவானால் அதுசீர் செய்யப்படும்.
இதேபோல் மாவட்டத்தில் குளிர் வழக்கத்திற்கு மாறாககாணப்படுகின்றது.
எனவே மக்கள் அவதானமாக இருக்கும்படி கேட்கப்படுகின்றனர் என்றார்.