அடுத்த பொது தேர்தல் தொடர்பாக அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அழைக்கப்பட்டால் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பொது தேர்தலுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடுவதே திட்டம் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் மொட்டிடமிருந்து அழைப்பு கிடைத்தால் அது தொடர்பாக கருத்தில் கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்னைகள் தொடர்பாக தீர்வு பெற்றுக்கொடுத்தல் மற்றும் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதும்தான் தனது கட்சியின் முக்கிய நோக்கம் என்பதை சுமந்திரன் வலியுறுத்துகிறார், அதோடு உடன்படும் எந்த அரசியல் குழுவினருடனும் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தயாராக உள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தன் – சுமந்திரன் மாறி.. மாறி கருத்து தெரிவிப்பதால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.