அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் டிரம்பை விட ஹிலாரி கிளிண்டன் 2.5 மில்லியன் வாக்குகள் அதிகம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. எனினும், மொத்த வாக்கு எண்ணிக்கை இதுவரை நிறைவடையவில்லை.
தற்போது வரை வெளியான வாக்கு எண்ணிக்கை படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் 65,152,310 வாக்குகள் பெற்றுள்ளார்.
அவரை தொடர்ந்து ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 62,626,216 வாக்குகள் பெற்றுள்ளார். மற்ற வேட்பாளர்கள் 7,373,248 வாக்குகள் பெற்றுள்ளனர்.
இதன் மூலம் டிரம்பை விட ஹிலாரி 1.9 சதவீதம் 2,526,094 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். எனினும், ஜனவரி 20ம் திகதி அவர் அதிகாரத்தில் அமர முடியாது.
அமெரிக்காவின் எலக்ட்டோரல் காலேஜ் முறைப்படி 538 இடங்களில் டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசு கட்சி 306 இடங்களிலும் ஹிலாரி கிளிண்டன் ஜனநாயக கட்சி 228 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே டொனால்ட் டிரம்ப் தற்போது ஜனாதிபதியாக தேர்வாகியுள்ளார்.