நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வரிகளை குறைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான தேச நிர்மாண வரி, பொருளாதார சேவைகளுக்கான கட்டண வரி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அறவிடப்படும் வரி ஆகியன இரத்து செய்யப்பட்டுள்ளன.
பங்குச்சந்தையில் அறவிடப்படும் மூலதன வரி, உழைக்கும் போதே செலுத்தும் வரி, பிடித்து வைத்தல் வரி, வரவு வரி ஆகியவற்றையும் உடன் அமுலாகும் வகையில் இரத்து செய்யப்படவுள்ளது.
தொலைத்தொடர்பு வரியை 25 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் 15 வீதமாக இருந்த வற் வரியை 8 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.
பொருளாதார புத்துயிரூட்டல் என்ற தொனிப்பொருளில் உடனடியாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார். அதற்காக வரிகளில் சீர்திருத்தங்ளை செய்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன.