Loading...
வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொலிஸாரின் பாதுகாப்புக் கெடிபிடிகளுக்கு மத்தியிலும் தீபம் ஏற்றி மலர் தூவி நமக்காய் உயிர்நீத்த நம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்று மாலை 6.05 மணிக்கு அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது மாவீரர் இருவரின் தந்தையான பொன்னுத்துரை சுப்பிரமணியம் அவர்கள் சக்கர நாற்காலியில் வந்து துயிலுமில்லத்தில் பிரதான பொதுச் சுடர் ஏற்றி வைத்தார்.
Loading...
வட மராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள இடத்தில் அஞ்சலி செலுத்தச் சென்ற உறவுகள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.
அத்துடன், அங்கு ஒலிபெருக்கி இயக்குவதற்கும் கொடிகள் கட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Loading...