சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பின்னணி கானா பாடகராக இருப்பவர் தரணி. இவர் மூன்று மாதங்களுக்கு முன் விஜயபானு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 20 பவுனின் நகையை தன் மகளுக்கு போட்டு திருமணம் செய்து வைத்தனர் விஜயபானுவுன் பெற்றோர்.
அதன்பின் தரணி சில காரணங்களுக்காக மனைவி அணிந்திருந்த நகையை அடமானம் வைத்து செலவு செய்து வந்துள்ளார். மேலும் திரைப்படத்தில் பாடுவதில் இருந்து போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்ட தரணி, மனைவியை அடித்து அவரது வீட்டில் இருந்து 30 பவுன் நகை வாங்கி வரச்சொல்லி கொடுமைப்படுத்தியுள்ளார்.
நகை கொண்டு வர மனைவியை அடித்து பெற்றோர் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இதனால் கடும் வேதனையில் விஜயபானு அருகில் இருந்த புளியந்தோப்பு மகளில் காவல் நிலையத்திற்கு சென்று கணவர் மீது புகார் அளித்துள்ளார்.
மேலும் கணவருக்கும் முன்னதாகவே நித்யா என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார் என்று கூறியுள்ளார். நான் இதை எப்போது கண்டுபிடித்தோனே அப்போதிலிருந்து என்னை கொடுமைப்படுத்தி வருவதாக கூறியுள்ளார் விஜயபானு.