திருகோணமலை- கந்தளாய் எாிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எாிபொருள் அளவை சாிபாா்த்துக் கொண்டிருந்த ஊழியா் ஒருவர் டிப்பா் வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் பாிதாபகரமாக பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கந்தளாய் பராக்கிரம மாவத்தை பகுதியைச் சேர்ந்த டி. டிலான் 28 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இன்று அதிகாலை திருகோணமலையிருந்து குறுணாகலைக்கு சென்ற டிப்பர் வாகனமொன்று குறித்த ஊழியரை மோதி விபத்தினை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் குழாய்யினுள் இறங்கி எரிபொருள் இருக்கும் அளவினை ஊழியர் பார்த்த போது வேகமாச் வந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது.
இதன் காரணமாக ஊழியரின் தலையில் பாரிய அடி ஏற்பட்டு அவரின் தலை நொருங்கியுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் டிப்பர் வாகனசாரதியை கைது செய்த பொலிஸார், டிப்பர் வாகனதையும் சாரதியையும் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில்தடுத்து வைத்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.