Loading...
எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சந்தேகநபர்கள் 7 பேருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
Loading...
இவ்வழக்கின் முக்கிய சந்தேகநபர்களாக கருதப்படும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, எவன்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் 3 முன்னாள் கடற்படை தளபதிகள் உள்ளிட்டோருக்கே இவ்வாறு வெளிநாடு செல்வதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
Loading...