இந்தியாவில் இரவு நேரத்தில் வீடு திரும்பிய பெண் ஒருவர் தான் பாதுகாப்பற்றதாக உணர்கிறேன் என்று சகோதரிக்கு phone செய்து பேசிய சில மணி நேரங்களிலே உடல் கருகி சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவின் Shamshabad-ஐ சேர்ந்தவர் மாதுரி(26). இவர் கால்நடை மருத்துவராக Nawabpet பகுதியில் வேலை செய்து வந்துள்ளார்.
மருத்துவரான இவர் அடிக்கடி ஹைதராபாத்தின் Gachibowli-வில் இருக்கும் skin கிளினிற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் நேற்று Gachibowli-வுக்கு செல்வதற்காக 5 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிய இவர், Shamshabad toll plaza-வுக்கு அருகில் தன்னுடைய் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து Gachibowli-வுக்கு சென்றுள்ளார்.
அதன் பின் இரு சக்கர வாகனம் நிறுத்திய இடத்திற்கு திரும்பிய மாதுரி, அங்கிருந்து தன்னுடைய சகோதரியான ரம்யாவிற்கு சரியாக உள்ளூர் நேரப்படி 7.22 மணிக்கு அலைப்பேசியில் அழைத்துள்ளார்.
அப்போது, என்னுடைய இரு சக்கர வாகனத்தின் முன் பக்க சக்கரம் பஞ்சர் ஆகிவிட்டது. ஒருவர் தானாக முன்வந்து உதவுவதாக கூறினார். நான் பஞ்சர் கடைக்கு எடுத்து செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இங்கு இருப்பவர்கள் லாரி டிரைவர்கள் போன்று உள்ளனர், அவர்கள் அனைவரும் தன்னையே பார்ப்பது போன்று உள்ளது, பயமாக இருக்கிறது, இரு சக்கர் வாகனம் வரும் வரை என்னிடம் தொடர்ந்து பேசிக் கொண்டே இரு என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், அவரது இரு சக்கர வாகனத்தை கொண்டு சென்ற நபர் பஞ்சர் பார்க்காமல், திரும்பியுள்ளார் இதனால் அது குறித்து அவர் கேட்ட போது, பஞ்சர் கடைகள் எல்லாம் மூடப்பட்டுவிட்டது, என்று கூறி வேறொரு இடத்திற்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார்.
அதன் பின் அவரின் சகோதரி சரியாக உள்ளூர் நேரப்படி இரவு 9.44 மணிக்கு அவருக்கு அலைப்பேசியில் அழைத்தபோது, அவரின் phone ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக பெற்றோருடன் அங்கு சென்றதாக கூறப்படுகிறது,
அங்கு சென்று போன் செய்தும் ஸ்விட்ச் ஆப்பில் இருந்ததால், பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து காலை 3 மணிக்கு மேல் அருகில் இருக்கும் காவல்நிலையத்தில், மாதுரி காணாமல் போன விவரம், அலைப்பேசியில் பயத்துடன் பேசிய விவரகளை எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து, பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு Shadnagar பொலிசாருக்கு எரிந்த நிலையில் உடல் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அங்கு சென்று பார்த்த போது காணமல் போனதாக கூறப்பட்ட மாதுரி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பொலிசார் அந்த phone call-ல் அவர் லாரி டிரைவர்கள் என்று கூறியதால், அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், எந்த ஒரு சரியான ஆதாரமும் கிடைக்கவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.